புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாய்களுக்கான பிரத்யேக பீர் மற்றும் சைட் டிஷ் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சவுத் கோஸ்ஃபோர்த் நகரில் உள்ளது ‘த பிராண்ட்லிங் வில்லா’ என்ற மது விடுதி. இங்கு நாய்களுக்கான பிரத்யேக பீர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாய்கள் சப்புக்
கொட்டி குடிக்க வேண்டும் என்பதற்காக இறைச்சி வாசனை சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஆல்கஹால் கிடையாது. சோடா போல கார்பன் வாயு ஏற்றப்படுவதில்லை என்பது சிறப்பம்சம். இதுபற்றி வில்லா விடுதி நிர்வாகிகள் கூறியதாவது:

 மது பாருக்கு பலர் தங்களது செல்ல நாய்களை அழைத்து வருகின்றனர். அங்கும் பிஸ்கட் தின்றுவிட்டு தண்ணீரைத்தான் நாய்கள் குடிக்கின்றன. தன்னை விட்டுவிட்டு எஜமானர் மட்டும் ஏதோ உசத்தி திரவத்தை குடிக்கிறார் என்று நாய்கள் ஏக்கப் பார்வை பார்க்கக் கூடாதல்லவா.. எஜமானர்களுக்கு சரிசமமாக நாய்களும் தண்ணியடிக்க வேண்டும் என்பதற்குதான் இந்த ஏற்பாடு. பீர் ருசி நாய்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக இறைச்சி வாசனை சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் ஆல்கஹால் கிடையாது. அதனால், எவ்வளவு குடித்தாலும் நாய்கள் நிதானம் தவறாது. இயல்பாக பீருக்கு கசப்பு சுவை கிடையாது. ஹாப் செடியின் காய்களை கலப்பதன் மூலம்தான் பீருக்கு கசப்பு சுவை கிடைக்கிறது. இந்த கசப்பு சுவை நாய்களுக்கு பிடிக்காது என்பதால், நாய் பீரில் ஹாப் காய்கள் சேர்க்கப்படுவதில்லை. நாய்க்கு மது மட்டும் கொடுத்தால் போதுமா.. சைட் டிஷ் வேண்டாமா? அதற்காக, ‘சண்டே ரோஸ்ட்’ என்ற பெயரில் புதுவித கிரேவியும் தயாரித்திருக்கிறோம். இதில் பூனையின் வாசனை அடிக்கும். நாய் பீர், கிரேவி, நாய்களுக்கான ஸ்பெஷல் சிக்கன் ‘சிக்கன் பிரான்க்’ உள்பட 6 ஐட்டங்கள் விலை ஆயிரம் ரூபாய். இவ்வாறு வில்லா நிர்வாகிகள் கூறினர். நாய் பீருக்கு ஏகப்பட்ட வரவேற்பு போல. 2 வாரத்தில் 48 பாட்டில்கள் விற்று தீர்ந்துவிட்டன. அடுத்த ஸ்டாக் ஆர்டர் கொடுத்திருக்கிறார்களாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top