அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த ஆந்திர பெண் கொலை வழக்கில், அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் பாவனா ரெட்டி (28). திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்தார். உடல்நிலை பாதித்த
அவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, முகப்பேர் பகுதியில் லட்சுமி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்து தனியாக தங்கினார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 9ம் தேதி அதிகாலை கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய ஜெ.ஜெ.நகர் போலீ சார், பாவனா வீட்டுக்கு அவ்வப்போது வந்துசென்ற கீழ்ப்பாக்கம் கார்டன், குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த சுரேஷ் (34) என்பவரை நேற்று பிடித்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கணவனை பிரிந்து வாழ்ந்த பாவனாவுக்கும், புரசைவாக்கத்தில் அலுமினிய கதவுகள் செய்யும் கம்பெனியில் வேலை பார்க்கும் சுரேஷுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் வைத்தே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவன்& மனைவி போல் வாழ்ந்துள்ளனர். இதில், திருப்தி அடையாத பாவனா தனக்கு தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொள்ளுமாறு, சுரேஷுக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளார். ஆனால், ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்த சுரேஷ், இரண்டாவதாக பாவனாவை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக, ஆந்திராவிலிருந்து முகப்பேருக்கு வந்தார் பாவனா. அங்கு வாடகை வீடு எடுத்து தங்கியிருந்தபோது, அவருக்கு வேண்டிய உதவிகளை சுரேஷ் செய்து வந்தார். கடந்த 6ம் தேதி இரவு அவரை அழைத்திருக்கிறார் பாவனா. வேலை பளு காரணமாக அன்று செல்லாத சுரேஷ், 8ம் தேதி இரவு சென்றிருக்கிறார்.
அப்போது, ‘எனக்கு ஆசை ஏற்படும்போது அழைத்தாலும் வரமறுக்கிறாய்; தாலி கட்டி மனைவியாக ஏற்கவும் சாக்கு போக்கு சொல்கிறாய்’ என்று சுரேஷிடம் கோபப்பட்டு சண்டை போட்டிருக்கிறார் பாவனா. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், காய்கறி நறுக்கும் கத்தியால் பாவனா கழுத்தில் குத்தியிருக்கிறார். பின்னர், அவரது கழுத்தை அறுத்து விட்டு, அவரது செல்போனை எடுத்துக் கொண்டு தப்பி சென்றிருக்கிறார். உடலில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால், சம்பவ இடத்திலேயே பாவனா பரிதாபமாக இறந்தார். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சுரேஷை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக