புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நடத்தையில் சந்தேகப்பட்டு தலைமுடியை அறுத்ததால் கணவரை செல்போன் சார்ஜரால் கழுத்தை இறுக்கி, காதில் பூச்சி மருந்து ஊற்றி கொலை செய்த மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மன்னார்குடி அருகே மூவாநல்லூரை சேர்ந்தவர் செல்வம்(35). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சிவஜோதி (27). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.  செல்வம் 15 தினங்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் அவர் சேரன்குளத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு மனைவி சிவஜோதியும், அவரது குழந்தையும் மட்டும் தனியாக இருந்தனர். மாமனார், மாமியார் தனது மூத்த மகளை பார்ப்பதற்காக சென்னை சென்றுவிட்டனர். 

இந்நிலையில் நேற்று செல்வம் மாமனார் வீட்டில் மர்மமான முறையில் சடலமாக கிடந்தார். அருகே மது பாட்டில்கள், ஒரு பூச்சி மருந்து பாட்டில் கிடந்தது. கழுத்தில் இறுக்கிய தடம் காணப்பட்டது.

தகவலறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மனைவி சிவஜோதியிடம் போலீசார் துருவிதுருவி விசாரணை நடத்தினர். அதில் அவர் கணவரை கொன்றதை ஒப்புக்கொண்டார்.  எனது நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டார். இதனால் அடிக்கடி என்னிடம் தகராறு செய்வார். சம்பவத்தன்று இரவும் மதுகுடித்துவிட்டு வந்து தகராறு செய்தார். சண்டையில் எனது தலைமுடியை அறுத்துவிட்டார். இதனால் ஆத்திரத்தில் இருந்த நான் அவருக்கு சாப்பாட்டில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்தேன். உடனே அவர் தூங்கிவிட்டார். அதன்பின்னர் செல்போன் சார்ஜரால் அவரது கழுத்தை இறுக்கினேன். ஆனாலும் அவர் இறந்திருப்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனால், என்னை மிரட்டுவதற்காக அவரே வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து அவரது காதில் ஊற்றி கொன்றேன் என சிவஜோதி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.  இதுதொடர்பாக அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top