கொலம்பியாவில் 10 வயது சிறுமி தாயாகி இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இவள்தான் உலகிலேயே மிக குறைந்த வயதில் தாயானவள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கொலம்பியாவின் வடக்கு பகுதியில் வயூ பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.இங்கு 10 வயது
சிறுமி ஒருத்தி திடீரென கர்ப்பமானாள். 39 வாரங்கள் தீவிர கண்காணிப்புக்கு பிறகு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. ஆனால், பிரசவம் சற்று சிக்கலாக இருந்ததால் ஆபரேஷன் செய்து குழந்தை எடுக்கப்பட்டது.

சிறுமியுடன் உறவு வைத்த குற்றத்துக்காக, சம்பந்தப்பட்ட தந்தை மீது நடவடிக்கை எடுக்க முடியும். புகார் வந்தால் அவரை கைது செய்யவும் கொலம்பிய சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால், வயூ பழங்குடியின மக்களுக்கு, சட்டத்தில் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது தெரியவில்லை என்றும் அந்த பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. கொலம்பிய பழங்குடியின சிறுமி குழந்தை பெற்றெடுத்ததன் மூலம், இவள்தான் உலகிலேயே மிகக் குறைந்த வயதுள்ள தாய் என்று கூறுகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக