புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மட்டக்களப்பு நகரிலுள்ள மகாத்மா காந்தி சிலை மற்றும் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் ஞாபகார்த்த சிலை ஆகியன இன்று அதிகாலை இனந்தெரியாதோரினால் உடைத்து சேதமாக்கப் பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை, மட்டக்களப்பு
ஆனைப்பந்தி வித்தியாலயத்திலுள்ள சுவாமி விபுலானந்தர் சிலை, மட்டக்களப்பு கல்வி அலுவலகத்திற்கு முன்னாலுள்ள புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, ஆகியோரின் உருவச்சிலைகளும் இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தின் பிரதான வீதியில் இருந்த சுவாமி விவேகானந்தரின் மற்றொரு உருவச்சிலை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சேதப்படுத்தப்பட்டது.




நேற்று முன்தினம் மீண்டும் அதே இடத்தில் விவேகானந்தரின் உருவச்சிலைசிலை திறக்கப்பட்டது. இந்நிலையில், ஆனைப்பந்தியிலுள்ள விவேகானந்தர் சிலை உட்பட பல சிலைகள் இன்று அதிகாலை உடைக்கப்பட்டுள்ளன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top