புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

குழந்தையை மருத்துவமனை கழிவறையில் வீசிய கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்தனர். புதுவையை அடுத்த தமிழக பகுதியான வானூர் தாலுகா கொஞ்சுமங்கலம் விவசாய குடும்பத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 2ம் தேதி ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்தார்.

உடன் அவரது பெற்றோரும் வந்தனர். டாக்டரை சந்தித்த அவர்கள் திடீரென மாயமானார்கள். மறுநாள் காலை மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் கழிவறையில் ஆண் குழந்தை இறந்து கிடந்தது. கழிவறைக்கு சென்ற நோயாளிகள் குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  

இதற்கிடையே, எல்லைப் பிள்ளைச்சாவடி ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தனக்கு கரு கலைந்து விட்டதாக ஒரு பெண் சேர்க்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதில், சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. வானூர் அடுத்த கொஞ்சுமங்கலத்தை சேர்ந்தவர் சுபத்ரா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). புதுவையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படிக்கிறார். 

திருமணமாகாத அந்த மாணவி, அப்பகுதியை சேர்ந்த கட்சி பிரமுகருடன் ஏற்பட்ட பழக்கத்தில் கர்ப்பமானார். அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. கடந்த 2ம் தேதி மாணவிக்கு இடுப்பு வலி ஏற்பட்டதும் பெற்றோருடன் ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது கழிவறைக்கு சென்றபோது அவருக்கு வலி ஏற்பட்டது. உடனே தாயின் உதவியுடன் அவரே பிரசவம் செய்து, குழந்தையை எடுத்து கழிவறையில் வீசிவிட்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்தது. 
குழந்தையை கழிவறையில் வீசிய சுபத்ராவை போலீசார் கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top