புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

முதல் மனைவி சரியில்லை என்பதால் 2வது கல்யாணம் செய்த நபர், தன்னை விட்டு ஓடிப் போன முதல் மனைவி, அவரது காதலனுடன் ஏற்பட்ட ஊடலில் தன்னைத் தேடி வந்ததால் அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதைப் பார்த்த 2வது மனைவி ஆத்திரமடைந்து பிளேடை எடுத்து தனது கணவரை சரமாரியாக கீறித் தள்ளி விட்டார். படுகாயத்துடன் அந்த நபர் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஒரு மீனவர். இவரது மனைவி கவுரி. ஆனால் ராஜேஷுடன் சேர்ந்து வாழ விரும்பாமல் கவுரி இன்னொருவருடன் எஸ்கேப் ஆகி விட்டார். வேறு பகுதியில் வாழ்ந்து வருகிறார்.

மனைவி போனதால் கடுப்பாகிப் போன ராஜேஷ், சுதா என்பவரைக் கல்யாணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் ராஜேஷைத் தேடி கவுரி வந்துள்ளார். தனது காதலன் தன்னை கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்வதாக கூறி அழுதுள்ளார்.

கவுரி அழுவதைப் பார்த்த ராஜேஷ் துடித்துப் போய் விட்டார். மீன் பிடிப்பதை விட்டு விட்டு கவுரியை சமாதானப்படுத்தினர். பின்னர் வீட்டுக்குக் கூட்டிப் போனார். அப்போது சுதா வீட்டில் இல்லை. இதனால் சபலப்பட்ட ராஜேஷ், கவுரியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில் வெளியில் போன சுதா வீட்டுக்குத் திரும்பினார். வீடு உள்புறமாக பூட்டிக் கிடப்பதைப் பார்த்து குழம்பிய அவர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார். அப்போது ராஜேஷும், கவுரியும் உல்லாசமாக இருப்பதைப் பார்த்து கடும் கோபமடைந்தார்.

அதிரடியாக கதவை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்த சுதா, வீட்டில் இருந்த பிளேடை எடுத்து சரமாரியாக ராஜேஷ் உடலைக் கீறினார். இதனால் அவர் துடித்துக் கதறினார். சுதாவின் ஆவேசத்தைப் பார்த்து பயந்து போன கவுரி அடித்துப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் ராஜேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சுதாவைக் கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top