தென்ஆப்பிரிக்க அதிபராக ஜோக்கப் ஷுமா பதவி வகித்து வருகிறார். 70 வயதான இவருக்கு ஏற்கனவே 3 பெண்களுடன் திருமணம் நடந்துள்ளது. 1 குழந்தைகள் உள்ளனர்.5 மனைவிகளில் ஒருவர் 1998-ம் ஆண்டு விவகாரத்து பெற்றார். அவரது பெயர் கொஷாசனா பலாமினி ஷுமா. இவர் ஆப்பிரிக்க யூனியனின் தென்ஆப்பிரிக்க பிரதிநிதி ஆவார். மற்றொரு மனைவி கேத் கடந்த 2000-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது அவருடன் சிஷாகைலே ஷுமா, தொபேகா மடிபாஷுமா ஆகியோர் மனைவிகளாக உள்ளனர்.
இவர்களை தவிர போங்கிங்கெமா என்பவர் காதலியாக உள்ளார். திருமணம் செய்யாமல் இவருடன் ஷுமா குடும்பம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் மகன் இருக்கிறான்.
இந்த நிலையில் நீண்ட நாள் காதலியாக இருக்கும் போங்கிங்கெமாவை 6-வது திருமணம் செய்ய அதிபர் ஜேக்கப் ஷுமா முடிவு செய்தார். இதற்கிடையே சமீபத்தில் அவர் தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது தனது திருமணத்தை குடும்பத்தினரிடம் அறிவித்தார்.
இவர்களது திருமணம் அதிபர் ஷுமாவின் சொந்த கிராமமான நபால் மாகாணத்தில் க்வாஷுலுவில் உள்ள க்கான்ட்லா கிராமத்தில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த தகவலை அதிபர் ஷுமாவின் செய்தி தொடர்பாளர் மாக்மகராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த திருமணத்தின் மூலம் போங்கிங்கெமா ஷுமாவின் 4-வது மனைவி ஆகிறார். இவர் வர்த்தகம் உள்ளிட்ட பல பட்டங்களை பெற்றவர்.
0 கருத்து:
கருத்துரையிடுக