தரவளை பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்ட 57 வயதுடைய கோவிந்தன் என்பவரின் கொலைச்சம்பவம் தொடர்பாக மரணமானவரின் மகளும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக ஹட்டன் பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி தெரிவிக்கையில் தலையில் பலமாக தாக்கியதால் இந்த நபர் மரணமாகியுள்ளார் என்றார்.
இவரது சடலம் பிரதே பரிசோதனைகளுக்காக நாவலப்பிட்டி ஆதரா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மரணமானவரின் மகளும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை இவர்களின் நான்கு பிள்ளைகளையும் பொறுப்பேற்பதற்கு இது வரையிலும் எவரும் வராத காரணத்தினால் இவர்கள் பொலிஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பத்து வயதுக்கு குறைவானவர்கள் ஆவர்.
தனிப்பட்ட குடும்பத்தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தை ,ந்த சிறுவர்களும் நேரடியாக கண்டுள்ளதால் அவர்களின் வாக்கு மூலங்களும் பெறப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடம் அனேகமாக இந்த சிறுவர்கள் சிறுவர் நன்னடத்தைப் பிரிவுக்கு ஓப்படைக்கப்படலாம் என குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக