புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த பாரூரை பக்கமுள்ளது சின்ன கூத்தம்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் தர்மன். இவரது மகள் லட்சுமி (வயது 19). இவருக்கும், பேருஅள்ளியை சேர்ந்த கோவிந்தராஜ் (23) என்பவருக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் லட்சுமி தனது தாயார் வீடான சின்ன கூத்தம்பட்டி அருகில் உள்ள பண்ணந்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். தற்போது பொதுத்தேர்வு எழுதி விட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

இதற்கிடையில் லட்சுமிக்கும், அந்த பள்ளியில் உடன் படித்து வந்த சக மாணவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த லட்சுமியின் அண்ணன் மணிகண்டன் (21) லட்சுமியை கண்டித்தார்.

இருந்த போதிலும் லட்சுமி தனது கள்ளக்காதலனுடன் உள்ள தொடர்பை துண்டிக்கவில்லை. இந்த நிலையில் அவர் தனது கள்ளக்காதலனுடன் திருப்பூருக்கு ஓடிவிட்டார். இதுபற்றி அறிந்த லட்சுமியின் கணவர் கோவிந்தராஜ், அண்ணன் மணிகண்டன் ஆகியோர் திருப்பூர் சென்று லட்சுமியை மீட்டு வந்தனர்.

இது தொடர்பாக மணிகண்டனுக்கும், அவரது தங்கை லட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் வீட்டில் இருந்த வெட்டு கத்தியால் லட்சுமியின் தலை, கழுத்து, கைகளில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் ரத்த வெள்ளத்தில் லட்சுமி துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லட்சுமியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top