இங்கிலாந்தில் 'வாக்கிங்' சென்ற பெண் நோயாளி, குதிரை எட்டி உதைத்ததால் பரிதாபமாக இறந்தார்.இங்கிலாந்தின் கென்ட் நகரில் டேரன்ட்வேலி மருத்துவமனை உள்ளது. இங்கு 53 வயது பெண் ஒருவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த
டாக்டர்கள், ஒரே இடத்தில் இருக்க வேண்டாம். வாக்கிங் சென்று வாருங்கள் என்று அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி டேரன்த்வுட் சாலையில் உள்ள புல்வெளியில் அந்த பெண் வாக்கிங் சென்றுள்ளார். ஆனால், மருத்துவமனைக்கு திரும்பவில்லை.

சந்தேகம் அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அவரை தேடினர். அப்போது புல்வெளியில் அந்த பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அங்கு குதிரை மட்டும் புல் மேய்ந்து கொண்டிருந்தது. வேறு எந்த தடயங்களும் இல்லை. தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'புல்வெளியில் வேறு யாரும் இல்லை. கொலை நடந்ததற்கான எந்த தடயங்களும் இல்லை. அங்கிருந்த குதிரை உதைத்ததால் நோயாளி பெண் இறந்திருக்கலாம்' என்றனர். இத்தகவலை டெய்லி மெயில் பத்திரிகை நேற்று வெளியிட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக