தன்னுடைய காதலுடன் தொலைபேசியில் கதைக்க பெற்றோர் மறுப்புத் தெரிவித்ததினாலும் தன்னை காதலனைப் பார்க்க விடாது அறை ஒன்றில் அடைத்து வைத்ததினால் தங்கிக் கொள்ள முடியாத காதலி தனக்குத்தானே தீ
வைத்துக் கொண்ட சம்பவம் யாழ்.தெல்லிப்பளையில் இன்று திங்கள் அரங்கேறியுள்ளது
வைத்துக் கொண்ட சம்பவம் யாழ்.தெல்லிப்பளையில் இன்று திங்கள் அரங்கேறியுள்ளது
தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட இளம் பெண் தீயில் கருகிய நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்
இச் சம்பவமானது இன்று திங்கள் கிழமை காலை தெல்லிப்பளையில் நடைபெற்றுள்ளது.
தெல்லிப்பளையைச் சேர்ந்த குறித்த பெண்ணான ஜீவராஜ் சிவகலா (வயது 18) என்ற இளம் பெண்னே தீயில் கருகிய நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் 24 வது வாட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்
இதேவேளை தனது காதலி மருத்துவமனையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டதை அறிந்த காதலன் வைத்தியசாலையில் காதலியின் பெற்றோரோடு கைகலப்பில் இன்று திங்கள் மாலை ஈடுபட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருந்தும் இதை உறுதிப்படுத்த முடியவில்லை
0 கருத்து:
கருத்துரையிடுக