தன்னுடைய கணவரின் கடையில் புத்தகங்களை வாங்க மறுத்ததால், 5 மாணவிகளின் முகத்தில் கரியை பூசி அவமானப்படுத்தியுள்ளார் ஆசிரியை ஒருவர்.பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் தோபாதேக் சிங் நகரிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. லைபா, அலியா, நடாஷா, ரிம்ஷா, அலிஷா என்ற 4 மாணவிகள் 4வது படிக்கின்றனர்.
பாட புத்தகங்களைத் தன்னுடைய கணவர் நடத்தும் கடையிலேயே வாங்க வேண்டும் என்று ஷாஹிதா பர்வீன் என்ற ஆசிரியை சொல்லியிருக்கிறார். இந்த 4 மாணவிகளும் கேட்கவில்லை.
எனவே வகுப்புக்கு வந்த அவர்களிடம் இதைக் கேட்டு அடித்த ஆசிரியை, அவர்களுடைய முகங்களில் கரியைப் பூசியிருக்கிறார். அதற்கும் முன்னதாக, புத்தகம் வாங்காவிட்டாலும் பரவாயில்லை ஆளுக்கு 200 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டு வாங்கியிருக்கிறார்.
தங்களுடைய மகள்கள் கரிய முகத்துடன் வீட்டுக்கு வந்ததும் வெகுண்ட பெற்றோர்கள் மாவட்டக் கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். மாவட்ட துணைக் கல்வி அதிகாரி புஷ்ரா இஷாக் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக