யாழ்ப்பாணம் நாவாந்துறை, பொம்மை வெளிப்பகுதியிலுள்ள வீடு ஒன்றில் தனது மனைவியைப் பூட்டிவைத்து மண்ணெண்ணை ஊற்றி கொழுத்த முயற்சி செய்தார் என்ற சந்தேகத்தில் குறித்த பெண்ணின் கணவனை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறித்த பெண்மணி (வயது 40) கணவனிடமிருந்து தப்பியோடி யாழ்.பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்து தனக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பாக முறையிட்டுள்ளார்
அவரிடமிருந்து முறைப்பாட்டைப் பதிவு செய்து கொண்டு அப் பெண்ணின் கணவனைத் தோடி யாழ்.பொலிஸார் இரண்டு வாகனத்தில் விரைந்துள்ளதாகவும் அவர் யாழ்.நகரிலுள்ள மதுக்கடை ஒன்றில் மது அருந்திக் கொண்டிருக்கும் போது விலங்கிடப்பட்ட நிலையில் தூக்கி வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற் கொண்டு வருவதாக யாழ்.பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்
0 கருத்து:
கருத்துரையிடுக