புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வவுனியா செட்டிக்குளம் இலக்கம் 3 மெனிக்பாம் முகாமில் உள்ள வீடொன்றில் தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் என்பவற்றைகொள்ளையிட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த வீட்டில் இருந்து 1,84,000 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களும் 2000 ரூபா பணமும் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இது குறித்து செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அப்பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இவரிடம் இருந்து களவாடப்பட்ட பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேக நபரான பெண்ணை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top