தண்ணீர் எடுக்கச் சென்றபோது 14 வயது சிறுமியை இனந்தெரியாத நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று யாழ். தென்மராட்சி, மிருசுவிலில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாகவது மிருசுவில் கெற்பொலிப்
பகுதியைச் சேர்ந்த சிறுமி...
பகுதியைச் சேர்ந்த சிறுமி...
கடந்த 4 ஆம் திகதி புதன்கிழமை மாலை தனது வீட்டிற்கு அருகில் உள்ள வயல்வெளிக் கிணற்றில் தண்ணீர் எடுத்து வருவதற்காகச் சென்றுள்ளார். மேற்படி சிறுமி தண்ணீர் எடுப்பதற்காக தனியாக வருவதை அவதானித்த அங்கிருந்த நபர் ஒருவர் சிறுமியை தனியாக இழுத்துச் சென்று மறைவிடம் ஒன்றில் வைத்து அச் சிறுமி மீது பாலியல் பலாத்காரம் புரிந்துவிட்டு மயங்கிய நிலையில் சிறுமியை விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தண்ணீர் எடுப்பதற்குச் சென்ற சிறுமியை நெடுநேரமாகியும் காணவில்லை என்று தேடிச்சென்ற பெற்றோர் சம்பவ இடத்திற்கு வருகைதந்த வேளை அங்கு சிறுமி மயக்கமடைந்த நிலையில் வீழ்ந்து கிடப்பதனைக் கண்டுள்ளனர்.
அங்கிருந்து சிறுமி மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். ஆயினும் தொடர்ச்சியாக கடுமையான இரத்தப் பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை செய்த வைத்தியர்கள் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இதற்கிடையில் கிணற்றடியில் ஏற்கனவே நின்றிருந்ததாக கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் தேடிவரும் நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் கொடிகாமம் பொலிஸார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் வலைவிரித்து தேடிவருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக