இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் கவுன்டியில் உள்ள டட்லி நகரை சேர்ந்தவர் கய்லி ஹட்ஜ்சன் (25). இவருக்கு கடந்த 2005ல் குழந்தை பிறந்தது. இரட்டைக் குழந்தை. இரண்டும் பெண் குழந்தை. அக்கா ரெமீ பளிச்சென்ற பால் வண்ணத்தில் செக்கச்செவேல் என்று இருக்கிறாள்.
சுண்டிவிட்டால் ரத்தம் வரும். அவளோ சிவப்பு. தங்கை கியான் அப்படியே உல்டா. கன்னங்கரேல் நிறம். பிறந்தபோதே, ‘பிளாக் அண்ட் ஒயிட் சகோதரிகள்’ என்று இங்கிலாந்து பத்திரிகைகளில் பரபரப்பாக செய்திகள் வெளியாயின. குழந்தைகளுக்கு இப்போது 7 வயது. பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள். வெளியூர்வாசிகள் இப்போதும் இவர்களை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
சுண்டிவிட்டால் ரத்தம் வரும். அவளோ சிவப்பு. தங்கை கியான் அப்படியே உல்டா. கன்னங்கரேல் நிறம். பிறந்தபோதே, ‘பிளாக் அண்ட் ஒயிட் சகோதரிகள்’ என்று இங்கிலாந்து பத்திரிகைகளில் பரபரப்பாக செய்திகள் வெளியாயின. குழந்தைகளுக்கு இப்போது 7 வயது. பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள். வெளியூர்வாசிகள் இப்போதும் இவர்களை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
கய்லி ஹட்ஜ்சன், அவரது கணவர் ஹார்டர் இருவருமே வெள்ளை. இருவரின் அம்மாக்களும் வெள்ளை. அப்பாக்கள் மட்டும் கருப்பு. குடும்பத்தின் இந்த கலர் விளையாட்டுதான் குழந்தைகளை பிளாக் அண்ட் ஒயிட்டாக படைத்திருக்கிறது என்கின்றனர் டாக்டர்கள். இதுபற்றி அவர்கள் மேலும் கூறுகையில், ‘‘வெள்ளை, கருப்பு தம்பதிக்கு எந்த நிறத்திலும் குழந்தைகள் பிறக்கலாம். பெண்ணின் முட்டை, ஆண் விந்தணு இரண்டிலும் வெள்ளை தோல் ஜீன் இருந்தால் வெள்ளை குழந்தை பிறக்கும். ஒன்று கருப்பாக இருந்தாலோ, இரண்டும் கருப்பாக இருந்தாலோ கருப்பு குழந்தை பிறக்கும். இரட்டை குழந்தையில் ஒன்று வெள்ளையாகவும் இன்னொன்று கருப்பாகவும் பிறக்கும் சாத்தியக்கூறு 10 லட்சத்தில் ஒன்று’’ என்றனர்.
கய்லி தற்போது கணவனை பிரிந்து வாழ்கிறார். இரு குழந்தைகளும் கய்லியிடம்தான் வளர்கின்றன. இதுபற்றி கய்லி கூறியதாவது:
இரட்டை குழந்தை என்பது முன்கூட்டியே தெரியும். பிளாக் அண்ட் ஒயிட் என்பது பிறந்த பிறகுதான் தெரிந்தது. இருவரும் ரொம்ப பாசமாக பழகுகிறார்கள். பாட்டு, நடனத்தில் இருவருக்கும் ஆர்வம் அதிகம். கியானுக்கு விலங்குகள் என்றால் உயிர். ரெமீக்கு சமையலில் விருப்பம். நானும் சரி, அவர்களும் சரி, நிறத்தை பெரிதாக நினைப்பதில்லை. என்னை பொருத்தவரை இருவரும் சமம்தான். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.. இருவரும் பிறந்த பிறகு பேசிய முதல் வார்த்தை ‘ஜூஸ்’ என்பதுதான். சில நேரம் இவள் தும்மினால், அவளும் தும்முவாள். பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்துவிடும்.
இவ்வாறு கய்லி கூறினார். 7வது பிறந்தநாள் கொண்டாட உள்ள பிளாக் அண்ட் ஒயிட் சகோதரிகளுக்கு இமெயிலில் வாழ்த்துகள் குவிகிறதாம்.
0 கருத்து:
கருத்துரையிடுக