புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ரஷ்யாவில் பிறந்து சில மணிநேரம் ஆன பெண் குழந்தையை ஃபிரிட்ஜூக்குள் வைத்து ஐந்து ஆண்டுகளாக பாதுகாத்து வந்த கொடூரத் தாயை காவல்துறையினர் கைது செய்தனர். ரஷ்யாவின் வடக்கு மாகாணத்தில் ரியாநெவோஸ்டி நக‌ரில் வசித்து வந்தவர் லையோட்மிலா சிமிர்நோவா(வயது 38).இவருக்கு கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரசவ வலி ஏற்படவே தனது வீட்டிலேயே பெண் குழந்தையை பெற்றார். உடனே அக்குழந்தையை லேசான துணியால் சுற்றி வீட்டின் ஃபிரிட்ஜூக்கு வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 29ம் திகதியன்று சிமிர்நோவாவின் நண்பர் ஒருவருக்கு இறைச்சி சமைத்து கொடுக்க ஃபிரிட்ஜூனை திறந்தார். அப்போது அங்கிருந்த நண்பர் துணியால் சுற்றப்பட்டிருந்ததை பிரித்து பார்த்த போது குழந்தை பிணமாக உறைந்து போய் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது தொடர்பாக பொலிசில் புகார் செய்யப்பட்டு, அந்த கொடூரத்தாய் அர்க்ஹாங்லேஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு 22 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top