புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இலங்கைத்தீவினை நோக்கிய பயணத்துக்கு, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானசேவையினை புறக்கணியுங்கள் எனும் குரல்கள் பரவலாக எழுந்து வரும் நிலையில், சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானசேவை சுவிஸ் மற்றும் இத்தாலி ஆகிய
நாடுகளுக்கான தனது பயணிகள் சேவையை மட்டுப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

சுவிசின் சூரிச் மற்றும் இத்தாலியின் றோம் ஆகிய நகரங்களுக்கான தனது சேவையை மே - யூன் ஆகிய மாதங்களுக்கு இடைநிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்விரு நாடுகளுக்கான சேவையினை மட்டுப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரிசுக்கான தனது சேவையினை எதிர்வரும் யூன் முதலாம் திகதியில் இருந்து இடைநிறுத்தும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ், யூன் 27ம் திகதி முதல் ஒகஸ்ற் 21ம் திகதி வரை சேவையில் ஈடுபடுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

றோமுக்கான தனது சேவையினை மே 5ம் திகதி முதல் இடைநிறுத்துவதாகவும், யூன் 27ம் திகதி முதல் செப்ரெம்பர் 9ம் திகதி வரை சேவையில் ஈடுபடுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளினால் சுற்றுலாப்பயணத்தில் குறிப்பிட்ட வீதம் வீழ்ச்சி ஏற்படுமென எதிர்பார்கப்படுகின்ற நிலையிலேயே, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யாவுக்கான தனது சேவையினை விஸ்தரிப்பதற்கும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் எண்ணியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top