ஜெர்மனி நாட்டில் உள்ள பார்யுன்சிவிக் நகரில் இரவு நேரத்தில் சாலை வழியாக ஒரு இளம்பெண் நடந்து சென்றார். தற்செயலாக அவர் திரும்பி பார்த்த போது பிளாட்பாரத்தில் புலி ஒன்று நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவசர போலீசுக்கு தொடர்பு கொண்டு, வீதியில் புலி ஒன்று
சுற்றித்திரிகிறது என்று கூறினார்.
சுற்றித்திரிகிறது என்று கூறினார்.
இதனை அடுத்து போலீஸ் படை துப்பாக்கிகள் போன்ற நவீன ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வினவிலங்கு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். சாலையில் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பாக இருந்தது. கடைசியில் அருகில் சென்று பார்க்கும் போது அது உண்மையான புலி அல்ல பொம்மை என்றும், யாரோ அதை வாங்கி செல்லும் போது தவறி விழுந்து இருக்கிறது என்றும் தெரியவந்தது.
ஏமாற்றம் அடைந்த போலீசார் பொம்மையை கைப்பற்றி எடுத்துக் சென்று குழந்தைகள் பள்ளிக்கு வழங்கினர். புகார் கொடுத்த பெண் பின்னர் போலீசாரிடம் தனது வருத்தத்தை தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக