கோதாவரி (ஆந்திரா): தன்னைக் காதலிக்க மறுத்த பெண் மீது ஆத்திரம் கொண்ட ஆந்திராவைச் சேர்ந்த 23 வயது கூலித் தொழிலாளி, அப்பெண்ணை 14 முறை சரமாரியாக கத்தியால் குத்தினார். மேலும் அவரது தொண்டையையும் கத்தியால் கிழித்து
விட்டார்.
மருத்துவமனையில் படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண் உயிருக்குப் போராடி வருகிறார்.
ஆந்திர மாநிலம் கிழக்குக் கோதாவரி மாவட்டம் புருகுகுந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் கொல்லி கிஷோர் குமார். 23வயதான இவர் கூலித் தொழிலாளியாவார்.
இவரது வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் தனலட்சுமி. இவர் பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். இவர் மீது காதல் வயப்பட்டார் கொல்லி கிஷோர். தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறும், காதலிக்குமாறும் தனலட்சுமியை அனத்தி வந்தார் கொல்லி கிஷோர். ஆனால் இதை ஏற்க மறுத்து விட்டார் தனலட்சுமி.
இதனால் கோபமடைந்த கொல்லி கிஷோர், கத்தியுடன் சென்று சரமாரியாக உடலில் வெட்டினார். மொத்தம் 14 இடங்களில் வெட்டினார். பின்னர் தனலட்சுமியின் தொண்டையையும் கத்தியால் குத்திக் கிழித்து விட்டார்.
ரத்தவெள்ளத்தில் மிதந்த தனலட்சுமியை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்லி கிஷோர் தற்போது தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக