புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருமண விழா மேடையில் மைக்கில் மின்சாரம் பாய்ந்தது. இதில் மணமகனின் அண்ணி பரிதாபமாக இறந்தார். மணமக்கள் உட்பட 20 பேர் காயம் அடைந்தனர். இதனால் திருமணம் தடைப்பட்டது.அந்திர மாநிலம் மேடக் மாவட்டம் இரக்பள்ளி பஞ்சாயத்து ராம்சந்தர் கிராமத்தைச்
சேர்ந்தவர் பிரகலாத்நாயக்(22). இவருக்கும், எர்ரபோகடா கிராமத்தை சேர்ந்த மாதுரிபாய்க்கும்(20) திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் மணமகன் வீட்டில் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர்.

அதன்படி நேற்று காலை திருமணத்திற்கான சடங்குகள் மணமேடையில் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது புரோகிதர் மைக்கில் மந்திரம் ஓதிக்கொண்டிருந்தார்.

திடீரென இந்த மைக்கில் மின்சாரம் பாய்ந்தது. இதில் அருகே இருந்த மணமகனின் அண்ணி சங்குபாய்(30) அதே இடத்தில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். மற்றும் புரோகிதர், மணமக்கள் உள்பட 20 பேர் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டனர்.

இதனால் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் இங்கும் அங்கும் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து படுகாய மடைந்த 20 பேரும் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக திருமணம் நின்று போனது. திருமண விழாவில் நடந்த இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top