புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தன்னுடன் சண்டை போட்ட தனது 3வது மனைவியை, குடிபோதையில் இருந்த அவருடைய 3வது கணவன் சரமாரியாக அடித்ததில் அந்தப் பெண் செத்துப் போனார். சென்னையைச் சேர்ந்தவர் அம்முலு. 32 வயதான இவர் மயிலாப்பூரில் தனது 3வது கணவர் சசிக்குமாருடன் வசித்து வந்தார்.
அம்முலுவின் முதல் கணவர் மகேஷ் ஏற்கனவே இறந்து விட்டார். இரண்டாவது கணவரை விட்டுப் பிரிந்து சசிக்குமாருடன் வசித்து வந்தார்.

சசிக்குமாருக்கும் மொத்தம் 3 மனைவிகள். இதில் மூன்றாவது மனைவிதான் அம்முலு. தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம் சசிக்குமார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை நடப்பது வழக்கம்.

நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு மூண்டது. அப்போது சசிக்குமார், அம்முலுவை அடித்துள்ளார். பதிலுக்கு அம்முலுவும் போட்டுத் தாக்கி விட்டார். இதையடுத்து இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். இதில் ஆத்திரத்தில் சசிக்குமார், அம்முலுவை சரமாரியாக அடித்ததில் அவர் மயங்கி விழுந்து இறந்து போனார். போலீஸார் சசிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top