புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சட்டகல்லூரி மாணவியை, மர்ம நபர்கள் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தை கண்டித்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக போலீசார் அடையாளம் தெரியாத நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அரியானா - பஞ்
சாப் மாநில எல்லையில் சோனிபட் மாவட்டத்தில் பகத்பூல்சிங் மகளிர் சட்டப்பல்கலை உள்ளது. இங்கு படித்துவரும் முதலாமாண்டு மாணவி ஒருவர் பல்கலை. வளாக ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார். நேற்று அம்மாணவி மார்க்கெட்டிற்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்த போது காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் மாணவியை வலுகட்டாயமாக கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.

மயங்கிய நிலையில் இருந்த மாணவியை பல்கலை வளாகத்திலேயே வீசிவிட்டு சென்றனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து சகமாணவிகள் போராட்டம் நடத்தினர். சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பல்‌க‌லை து‌ணைவேந்தர் பங்கஞ்மித்தல், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு பேரில் பல்கலை யில் கேண்டீன் வைத்து நடத்தும் ஒருவன் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதும் போலீசில் விசாரணையில் தெரிவந்துள்ள

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top