புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உத்தர பிரதேசத்தில் 6ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கி கருவை கலைக்க வலுக்கட்டாயமாக மாத்திரை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.உத்தர பிரதேச மாநிலம் உன்னோவ் பகுதியில் உள்ள பத்தேஹ்பூர் சௌராசி பிளாக்கைச் சேர்ந்தவர் லதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)(14). அவர்
அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியான கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாவில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு திடீர் என்று ரத்தப்போக்கு அதிகமாகி மயங்கினார். இதையடுத்து அவரது பெற்றோர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரது நிலைமை மோசமாக இருந்ததால் அங்குள்ள மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக லதாவை லக்னோவில் உள்ள ராணி மேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 10 வார கர்ப்பமாக இருந்த லதாவுக்கு பாதுகாப்பற்ற முறையில் அபார்ஷன் செய்ததால் அவரது கர்பப்பை பாதிக்கப்பட்டு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதைக் கேட்ட லதாவின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.அதன் பிறகே லதா நடந்த உண்மையக் கூறியுள்ளார். அவருக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர் ஹரி நாராயண் லதாவை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கற்பழித்துவிட்டு அதை யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளார். அவருக்கு பயந்து லதா இதை யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில் லதா கர்ப்பமானார். இதையறிந்த ஆசிரியர் பள்ளியில் சமையல் வேலை செய்யும் அனுராதா மூலம் லதாவுக்கு கருச்சிதைவு மாத்திரை கொடுத்துள்ளார்.

அந்த மாத்திரையை சாப்பிட்டவுடன் தான் அவருக்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.

இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியரையும், அனுராதாவையும் கைது செயதனர். இது குறித்து விசாரணை நடத்துமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த பள்ளியில் படிக்கும் வேறு எந்த மாணவியும் ஆசிரியர் ஹரி நாரயணால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top