புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தாய்லாந்தின் பாங்கொக் நகரின் விடுதியொன்றில் ஒரு பயணப்பெட்டிக்குள் 6 குழந்தைகளின் சடலங்களை வைத்திருந்த பிரித்தானியர் ஒருவர் தாய்லாந்துக் காவற்றுறையால் கைது செய்யப்பட்டார்.இந்தச் சடலங்கள் பில்லி, சூனியத்திற்காகக் கடத்தப்பட்டிருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகின்றது.
ஹொங்கொங்கில் தாய்வான் பெற்றோருக்குப் பிறந்த பிரித்தானியக் குடியுரிமை பெற்றிருந்தவர் இந்த நபராவார். இவரது பெட்டிகளில் 2-7 மாதத்திற்கிடைப்பட்ட குழந்தைகளின் சடலங்கள் 6 இருந்தன எனக் காவற்றுறையின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பிரிவின் துணைப்பிரிவுத் தலைவர் குறிப்பிட்டிருந்தாலும் படங்களில் காணப்படும் உடல்கள் குறைப்பிரசவக் கருக்கள் போலவே தென்பட்டதாக வேறுசில அறிக்கைகள் தெரிவித்தன.

இவற்றில் சில பொன்னாலான இலைகளால் மூடப்பட்டிருந்தன. இதைப் பார்க்கையில் இவை நிச்சயம் சூனிய விளையாட்டுக்களுக்காகவே கொண்டுவரப்பட்டிருக்கலாமெனக் காவற்றுறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறான உடல்கள் செல்வந்த வாடிக்கையாளர்களால் இணையத்தளங்களில் காணப்படும் பில்லி,சூனியச் சேவைகளின் ஊடாக வழங்கப்படுவதற்காகக் கொண்டுவரப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த உடல்களை ஒரு தாய்வானியச் செல்வந்தர் 200,000 பாட் (4,000 டொலர்கள்) இற்கு வாங்கி இதனைத் தாய்வானில் 6 மடங்கு அதிகமாக விற்பதற்காக அனுப்பியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது. தாய்லாந்தில் இவ்வாறான சூனிய மந்திரச் சடங்குகள் வீதிகளிற்கூடக் காணப்படுவது வழமையாகும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top