கனடா நகை கடையில் அதிக விலை மதிப்புடைய வைரத்தை ஆசாமி ஒருவர் திருடி, விழுங்கியுள்ளார். இதனை அவருடைய வயிற்றில் இருந்து வெளியே எடுக்க ஒரு வாரமாக அனைவரும் பாடுபட்டு வருகின்றனர். கனடாவின் ஆன்டாரியோவில் உள்ள நகை கடைக்கு ரிச்சர்ட் மெக்கன்ஸி மேத்யூஸ்(வயது 52) என்பவர்...
சென்றார். அங்கு வைரங்களை பார்வையிட்டார். ஊழியர்கள் கவனிக்கவில்லை என்று நினைத்து, ரூ.10 லட்சம் மதிப்புள்ள 1.7 கேரட் வைரத்தை நைசாக எடுத்து வாய்க்குள் போட்டு விழுங்கி விட்டார். கையில் தயாராக வைத்திருந்த போலி வைரத்தை வைத்து விட்டார்.
நகை கடை ஊழியர்கள் கண்டுபிடித்து விட்டனர். புகாரின் படி பொலிசார் விரைந்து வந்து ரிச்சர்ட்டை பிடித்து சென்றனர். இவரது வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அப்போது, வயிற்றுக்குள் 2 போலி வைரங்கள் இருப்பது தெரிய வந்தது.
உண்மையான வைரம் இருப்பது தெரியவில்லை. ரிச்சர்ட் விழுங்கிய வைரத்தை வெளியேற்ற பேதி மருந்து, இனிமா கொடுத்தனர். அதன்பின் அவரும் பல முறை பாத்ரூம் போய் வந்ததுதான் மிச்சம். வைரம் வெளியில் வரவில்லை. கடந்த ஒரு வாரமாக இப்படியே பல முறை இனிமா கொடுத்தும் பலனில்லை.
இதுகுறித்து பொலிஸ் அதிகாரி கோரே கூறுகையில், வைரத்தை வெளியேற்ற ஒரு வாரமாக முயற்சி செய்கிறோம். அது வெளியில் வந்தால், ரிச்சர்ட் மீதான குற்றத்தை நிரூபிக்க முடியும்.
நகை கடையில் இருந்து ரிச்சர்ட்டை பிடித்த பிறகு சில நாட்கள் வயிறு இளகி வயிற்றுப் போக்கு ஏற்படும் வகையில் உணவு கொடுத்தோம். அதில் பலனில்லை. இப்போது அவர் விரும்பும் உணவை கொடுத்து வருகிறோம். விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவது ஆச்சரியமாக உள்ளது என்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக