வடக்கு இத்தாலியில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்தன. இக்கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கி 6 பேர் பலியாகிவிட்டதாகவும், சுமார் 50 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எமிலியா ரோமாக்கா பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரவு பணிக்கு சென்ற நான்கு பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தனர்.
போலக்னா பகுதியில் 37 வயது ஜெர்மன் நாட்டு பெண் ஒருவர் இறந்துவிட்டதாகவும், நில நடுக்க அதிர்ச்சியில் 100 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் பலியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எமிலியா ரோமேக்னா பகுதியில் மையமாக கொண்டு ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.9 ஆக பதிவாகியிருன்தது. மேலும் இந்நிலநடுக்கம் சுமார் 20 வினாடிகள் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்து:
கருத்துரையிடுக