புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இன்றைய நவீன யுகத்திலும் நடந்து வருகின்ற சம்பவங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்குபவையாக இருக்கின்றன.இவர்களுக்கான தண்டனை நிச்சயம் பெரிதாக இருக்க வேண்டும். குவைத் நாட்டவர் ஒருவர் மகளை கடந்த 12 வருடங்களாக பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்தி வந்திருக்கின்றார்.

மகளுக்கு இப்போது வயது 22. அதாவது 10 வயதில் இருந்து இவர் தொடர்ச்சியாக கற்பழிக்கப்பட்டு வந்திருக்கின்றார்.இந்நிலையில் மகள் தற்போது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமையை அடுத்து தகப்பனுக்கு எதிராக வழக்கு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

தலைநகர் குவைத்தில் உள்ள Houli நகர பொலிஸ் நிலையத்துக்கு யுவதி சென்று இருக்கின்றார். உயர் அதிகாரியுடன் தனிப்பட பேச வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார். இதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

தகப்பன் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஒன்றாகவே படுத்து வருகின்றார், இதனால் தகப்பனிடன் கன்னித் தன்மையை இழந்து விட்டார் என்று உணர்கின்றார் என்றும் பொலிஸ் அதிகாரிக்கு யுவதி சொல்லி இருக்கின்றார். ஆனால் தகப்பனுக்கு எதிராக வழக்கு போட வேண்டாம் என்று கேட்டு இருக்கின்றார்.

ஆயினும் யுவதியை ஆசுவாசப்படுத்தி பொலிஸ் அதிகாரி வழக்கு நடவடிக்கைக்கு சம்மதிக்க வைத்து இருக்கின்றார்.யுவதியின் தாய் வெளிநாட்டவர். 2000 ஆம் ஆண்டு பிரிந்து சென்று விட்டார். அன்றில் இருந்து மகளை தகப்பன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்திருக்கின்றார்.

தகப்பனின் பிடியில் இருந்து தப்ப மகள் பல தடவைகள் வீட்டை விட்டு ஓடியும் இருக்கின்றார். ஆயினும் போக்கிடம் இல்லாமையால் திரும்பி வீட்டுக்கே வந்திருக்கின்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top