யாழ். பாஷையூர் பற்றிமாதா தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியிலிருந்து பிறந்து ஒரு நாளேயான சிசுவொன்று கைவிடப்பட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டதாக யாழ். பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலையடுத்து, இச்சிசு மீட்கப்பட்டதாகவும் அக்காணியின் புற்தரையில் இச்சிசு இரத்தம் தோய்ந்த நிலையில் காணப்பட்டதாகவும் யாழ். பொலிஸார் கூறினர்.
மீட்கப்பட்ட இச்சிசு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சிசுவை விட்டுச் சென்ற தாய் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை தேடிக் கண்டுபிடிப்பதற்கான விசாரணையை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
kaalam karikalam aaki possu
பதிலளிநீக்கு