புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மகனை விளையாட்டிற்காகச் சலவை இயந்திரத்திற்குள் போட்டுவிட்டுப் பின்னர் அவனை வெளியே எடுக்கமுடியாமல் சிறிதுநேரம் தவித்த பெற்றோர்களின் முட்டாள்தனத்தைத்தான் என்னவென்று சொல்வது.


உடைகளைத் துவைக்கும் இடத்திலுள்ள இயந்திரங்களில் சிறுவர்களின் உடைகள் 2.95 டொலர் என்று காட்டப்பட்ட இடத்தின் கீழே ஒரு பெற்றோர் தமது குழந்தையை ஒரு தள்ளுவண்டியில் வைத்திருந்தனர். அத்துடன் அவர்கள் தங்களது உடைகளை ஒரு மேசையில் பிரித்துக்கொண்டிருந்தனர்.

இந்த வேளையில் சிவப்பு மற்றம் இளஞ்சிவப்பு நிற மேலாடை அணிந்த பெண் உடைகளைப் பிரித்துக்கொண்டிருக்கையில் நீலநிறக் கட்டம் போட்ட நபர் அச்சிறு பையனை அந்த சலவை இயந்திரத்திற்குள் தூக்கிவைத்து மூடினார்.

அவர்களது விளையாட்டை வினையாக்கியது அதிலிருந்த சுயமாகச் சாத்திக்கொள்ளும் கதவு சாத்தியது. இதனை எதிர்பாராத அப்பெற்றோர் தமது குழந்தையை விடுவிக்கப் பெரும் பிரயத்தனப்பட்டனர்.

அவர்களது பயம் அதிகரித்தபோது அங்குள்ள சுத்தஞ்செய்யும் மனிதன் அவர்களை விளங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். தாயார் வெளியே ஓடி மற்றவர்கள் இருக்குமிடத்திற்குச் சென்று முகத்தை மூடியபடி கத்திக்கொண்டு உதவிகேட்பதுபோலத் தெரிந்தது.

பின்னர் தந்தை மற்றவர்களை நோக்கி ஓடிச்சென்றபோது தாயார் இயந்திரத்தின் கதவுப்பிடியை இழுத்துக்கொண்டிருந்தார்.

பின்னர் அவரும் ஓடிச்சென்று ஒருவாறு மற்றவர்களை அழைத்துவந்தபோது விரைந்து தீர்மானம் எடுத்த நபர் ஒருவர் அந்த இயந்திரத்தின் பின்னாலுள்ள சிவப்புநிற வேறுபிரிக்கும் மேசையைத் தள்ளிவிட்டு அந்த இயந்திரத்தினை பிரதான மின்வழங்கியிலிருந்து துண்டிக்க முயற்சித்தார். இதன்போது அவர் ஒரு குப்பைக்கூடையையும் அவசரத்தில் தட்டிவிட்டார்.

இன்னொரு பெண் கையில் வெள்ளைத் துவாயுடன் தனது பிள்ளைகளுடன் நின்றிருந்தார்.

இதற்கிடையில் இன்னும் பலர் குழுமிவிட்டனர். அந்த தந்தை மேலும் கீழுமாகப் பாய்ந்துகொண்டிருந்தார். வீடியோவில் அவர்களது சத்தம் கேட்காவிட்டாலும் அவர்களது செய்கைமூலம் அவரது பதற்றம் வெளிப்படையாகத் தெரிந்தது.

பெற்றோர்கள் இருவரும் ஒருவரையொருவர் கோபத்தில் கத்தினர். அப்பெண்ணோ மேசைக்கு அருகே சென்று தனது கைகளை விரக்தியில் பலமாகத் தட்டினார்.

இறுதியில் ஒருவாறு அந்த இயந்திரம் திறக்கப்பட்டு பையன் தந்தையினால் இழுத்தெடுக்கப்பட்டு வெளியே கொண்டுசெல்லப்பட்டான். அவர் பின்னே தாயாரும் வெளியே ஓடினார்.

துவாயுடன் நின்ற பெண் விரக்தியுடன் இந்தச் சம்பவத்தை நினைத்து எரிச்சலடைந்ததுபோல அங்கிருந்து அகன்றார்.

இந்த வீடியோ YouTube இல் போடப்பட்டிருந்தது. குழந்தை அதன்பின்னர் சிறிய காயங்களுடன் நலமாக உள்ளதென்றும் குறிப்பிட்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top