தேன்நிலவுக்காக சென்ற புதுமணத் தம்பதியினடம் சண்டையிட்ட கும்பலொன்று மணப்பெண்ணை வல்லுறவுக்குட்படுத்த முயன்றதுடன் தங்க நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ள சம்பவமொன்று கொழும்பின் புறநகர்ப் பகுதியான பேலியகொடையில் இடம்பெற்றுள்ளது.
பேலியகொடை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தேன்நிலவை கழிப்பதற்காக சென்ற கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த தமிழ் தம்பதியொன்றே இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய கும்பலைச் சேர்ந்த சந்தேகநபரொருவரை பேலியகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த அந்த புதுமணத் தம்பதியினர் நேற்று முன்நாள் குறித்த ஹோட்டலுக்கு தேன் நிலவுக்காக சென்றுள்ளனர்.
அன்றைய தினம் இரவு 11 மணியளவில் அப்பகுதியில் மதுபோதை யில் வந்த நால்வர் அடங்கிய கும்ப லொன்று அப்பெண்ணை கேலி செய்தது டன் கணவனிடம் தகாத முறையில் பேசி யுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பெண்ணின் கணவன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் சண்டை மூண்டுள்ளது.
அதன் போது சண்டையிட்ட அக்குழுவினர் அப்பெண்ணை வல்லுறவுக்குட்படுத்த முயன்றுள்ளனர். அதன் பின்னர் பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தையடுத்து பாதிக்கப்பட்ட புதுமணத் தம்பதியினர் பேலியகொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதனடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பேலியகொடை பொலிஸார் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக