புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தனது 7 வயது மகனை அடித்துக் கொன்றுவிட்டு, அவன் உடலை தனது படுக்கை அறையில் வைத்து தீ மூட்டியுள்ளார் பிரித்தானிய முஸ்லீம் பெண்ணான சாரா. யாசீன் என்னும் தனது மகனை படு பயங்கரமாக அடித்துக் கொன்றுவிட்டு, பின்னர் அச்சிறுவனின் உடலை தனது படுக்கை அறைக்கு
கொண்டு சென்று பா.பி.கியூ எரிக்கப் பயன்படுத்தப்படும் ஸ்பிரிட் என்னும் எரிபொருளை ஊற்றி எரித்துள்ளார். பின்னர் வீட்டில் நடந்த தீ விபத்தில் அச்சிறுவன் கொல்லப்பட்டதாக தாய் கூறியுள்ளார். இருப்பினும் பிரித்தானிய பொலிசார் விட்டபாடாக இல்லை. அச்சிறுவன் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், இச் சிறுவன் நெருப்பில் எரிந்து கொல்லப்படவில்லை என்றும், அடித்ததால் தான் இறந்துள்ளார் என்றும் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து சிறுவனின் தாயாரைப் பொலிசார் கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தினர். இன்றைய தினம் நடைபெற்ற வழக்கில் தனது குற்றத்தை தாயார் ஒப்புக்கொண்டார். பிரித்தானியப் பொலிசாரின் அபார செயல்பாட்டை நீதிபதி பாராட்டியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top