வகுப்பு இறக்கம் செய்வேன் என பாடசாலை ஆசிரியர் பயமுறுத்தியதால் 16 வயது பாடசாலை மாணவியொருவர் தனக்கு தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் வல்வை மகளிர் கல்லூரியின் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் பொலிகண்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த கே. வைஷ்ணவி வயது 16 என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தீயிட்டு எரிந்த இவர் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் மரணமாகியுள்ளார்.
இவரது சடலம் மரணவிசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் யாழ். குடாநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூரியன்
0 கருத்து:
கருத்துரையிடுக