புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



இந்தச் சிறுவனின் தோற்றத்தைப் பாருங்கள். உங்களுக்கே பல உண்மைகள் தெரிய வரும்.மிக விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவர் சவூதி அரேபியாவின் Abha நகரத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றார்.இவர் நோயின்
தாக்கம் காரணமாக வேற்றுக் கிரகவாசிகளின் தோற்றத்துக்கு மாறிக் கொண்டிருக்கின்றார். எலும்புக் கூடாக மாறிக் கொண்டு இருக்கின்றார் என்றுகூட சொல்லலாம்.

ஆயினும் இவரின் நோயை வைத்தியர்களால் இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவரை விசேட வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டும் என்று இவரின் அம்மாவுக்கு வைத்தியர்கள் ஆலோசனை கூறி உள்ளனர்.ஆனால் மகனின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து விடலாம் என்கிற பேரச்சத்தில் தாய் உள்ளார். இதனால் வேறு வைத்தியசாலைக்கு மகன் மாற்றப்படுகின்றமையை ஆட்சேபிக்கின்றார்.

சிறுவனின் தகப்பன் இறந்து விட்டார். சிறுவன்தான் வீட்டில் ஒரே ஒரு ஆண். ஐந்து சகோதரிகள். ஐந்து பேரும் திருமணம் செய்து வெகு தொலைவில் உள்ள இடங்களில் வசிக்கின்றனர்.இச்சகோதரிகளில் ஒருத்தி தாய்க்கும், சகோதரனுக்கும் உதவிக்கு வழக்கமாக வந்து செல்கின்றார்.

சிறுவனுக்கு ஏற்பட்டு இருக்கின்ற விசித்திர நோய் சிறுவனை பலவீனப்படுத்திக் கொண்டே செல்கின்றது. எடையை குறைத்துக் கொண்டே செல்கின்றது.இவருக்கு அடிக்கடி கிருமித் தொற்று ஏற்படுகின்றது. அப்போதெல்லாம் சில வேளைகளில் இவரின் உடல் வெப்பநிலை அதிகரிக்கின்றது.

சவூதி அரேபிய பத்திரிகை ஒன்று இவர் சம்பந்தப்பட்ட செய்தியை பிரசுரித்து உள்ளது. குறித்த நோய் தொடர்பான ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top