புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சீனியர் டாக்டர் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மகாராஷ்டிராவை சேர்ந்தவர் டாக்டர் யோகேஷ் (39). இவர் சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைகள்
இதயநோய் நிபுணராக உள்ளார். மருத்துவமனையில் உள்ள குடியிருப்பில் தங்கியுள்ளார். இவருக்கு மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளம். 2 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவரது மனைவியும் டாக்டர். திருமணமான 3 மாதத்திலேயே குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.

முகப்பேரில் யோகேஷ் பணிபுரியும் அதே மருத்துவமனையில் கேரளாவை சேர்ந்த டாக்டர் சுகந்தி (29) (பெயர் மாற்றப்பட்டடுள்ளது) மயக்க மருந்து நிபுணராக உள்ளார். சூப்பர் ஸ்பெஷாலிட்டி பயிற்சி பெற்று வருகிறார். இவருக்கு உதவித்தொகை மாதம் ரூ.30 ஆயிரம் வழங்கப்படுகிறது. திருவான்மியூர் பிள்ளையார் கோயில் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார் சுகந்தி. கடந்த டிசம்பர் மாதம் பயிற்சியில் சேர்ந்துள்ளார். யோகேஷிடம் நட்பாக பழகி வந்தார். நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது.

அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார் யோகேஷ். இதில் சுகந்தி கர்ப்பமானார். திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். அதற்கு யோகேஷ், “நீ கருவை கலைத்தால் திருமணம் செய்து கொள்கிறேன்“ என்று கூறியுள்ளார். அதன்படி அவர் கருவை கலைத்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு சுகந்தியை திருமணம் செய்து கொள்ள யோகேஷ் மறுத்துள்ளார்.

திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் சுகந்தி புகார் கொடுத்தார். அதில், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி யோகேஷ் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார். இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப் பதிவு செய்து டாக்டர் யோகேஷை நேற்று கைது செய்தார். பின்னர் அவரை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top