அவுஸ்திரேலியாவில் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவர், கொலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர் சமன்ஜாட் சிங்(வயது 24). இவரது மனைவி மான் ப்ரீத் கவுர்(வயது 28).
கடந்த 2008ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணமானது. மனைவியின் மாணவர் விசாவில் சமன்ஜாட் சிங் அவுஸ்திரேலியா சென்றார். மான் ப்ரீத் கவுருக்கு மற்றொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை சமன்ஜாட் சிங் பலமுறை கண்டித்துள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி மான் ப்ரீத் கவுரை கழுத்தை அறுத்து சமன்ஜாட் சிங் கொன்றுள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை நியூசவுத் வேல்ஸ் மாகாண உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது.
நீதிமன்றத்தில் சிங் கூறுகையில், எனது தாய், தந்தையர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் தான் மான் ப்ரீத் கவுரை அவுஸ்திரேலியாவுக்கு படிக்க அனுப்பி வைத்தனர். அவர்களையே எனது மனைவி அவமானப்படுத்தினாள்.
அதுமட்டுமல்லாது எனக்கு துரோகம் செய்து விட்டு மற்றொரு நபரை காதலிப்பதாக கூறினாள். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் அவளது கழுத்தை அறுத்தேன். கொலை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் எனக்கு இல்லை என்று தெரிவித்தார்.
வார்த்தையாலேயே சிங்கை, கவுர் பலமுறை துன்புறுத்தியுள்ளார். பொறுமை இழந்த சிங் ஒரு கட்டத்தில் மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார் என சிங் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து சிங் கொலை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும் மனைவியின் கழுத்தை அறுத்த காரணத்தால் கவுர் கடைசியில் இறந்துள்ளார். இந்த குற்றத்துக்காக அவருக்கு எந்த விதமான தண்டனை என்பது குறித்து எதிர்வரும் 24ஆம் திகதி நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக