புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தாம்பரம் அகரம் தென்குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (25). சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கஜலட்சுமி (19) என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தார். தனது காதலை ஏற்கும்படி கஜ லட்சுமியிடம் வேலு பல முறை வற்புறுத்தினார். ஆனால் கஜலட்சுமி மறுத்தார் நேற்று இரவு 7.30 மணி அளவில் கஜலட்சுமி தனது அக்காள் நந்தியியுடன் கடைக்கு சென்று விடடு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர்களை வழிமறித்த வேலு தனது காதலை ஏற்கும்படி கஜலட்சுமியிடம் மீண்டும் வற்புறுத்தினார். இதனை நந்தினி தட்டிக்கேட்டார். அவள்தான் உன்னை பிடிக்கவில்லை என்கிறாளே ஏன் தொல்லை செய்கிறாய்? என்று கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வேலு அருகில் கிடந்த இரும்பு கம்பியால் கஜலட்சுமியை தாக்கினார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. தடுக்க முயன்ற அக்காள் நந்தினியையும் கம்பியால் தலையில் தாக்கினார்.

படுகாயம் அடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வேலுவை தேடிவருகிறார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top