புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே தனது மருமகள் வீடடுக்குப் பின்புறம் தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததைப் பார்த்து விட்டார் ஒரு முதியவர். இதைப் பார்த்த அந்தக் கள்ளக்காதலன், அந்தப் பெரியவரை காலால்
மிதித்துக் கொன்று விட்டு தப்பி ஓடி விட்டான்.

திருவட்டார் சங்கரன்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 74 வயது முதியவர் செல்லையன். இவரது மனைவி ரெத்தினா பாய். 70 வயதாகிறது. இவர்களுக்கு சுதர்சன் என்ற மகன் உள்ளார்.இவர் ராணுவத்தில் இருக்கிறார், பெங்களூரில் பணியாற்றி வருகிறார். சுதர்சனின் மனைவி பெயர் ஜிஜியா. இவருக்கு 30 வயதாகிறது. இந்தத் தம்பதிக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது.

கணவர் ராணுவத்தில் பெங்களூரில் பணியாற்றி வருவதால் ஜிஜியா தனது மாமனார், மாமியாருடன் திருவட்டாரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் செல்லையன் மரணமடைந்தார். இதுகுறித்து ரெத்தினாபாய் திருவட்டார் போலீஸில் ஒரு பரபரப்புப் புகார் கொடுத்துள்ளார்.

அதில், எனது கணவர் செல்லையனும், நானும், மகன் சுதர்சன், மருமகள் ஜிஜியா, 7 வயது பேத்தி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். விடுமுறையில் ஊருக்கு வந்த சுதர்சன் 9-ந் தேதி மீண்டும் பெங்களூர் புறப்பட்டு சென்றான்.

அன்று இரவு 10.30 மணியளவில் எனது கணவர் செல்லையன் தூக்கத்தில் இருந்து விழித்து கழிப்பறைக்கு சென்றார். அப்போது வீட்டின் மேல் பகுதியில் ஒரு ஆணும், பெண்ணும் பேசும் சத்தம் அவருக்கு கேட்டுள்ளது.

உடனே, எனது கணவர் அங்கு சென்று அது யார் என்று பார்த்தார். அப்போது எனது மருமகள் ஜிஜியா, உடையார்விளை கண்ணனூரை சேர்ந்த வாலிபர் எட்வின் ஜிவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை பார்த்ததும் எனது கணவர் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.

இதை பார்த்ததும் எட்வின் ஜிவி எனது கணவரை எட்டி மிதித்து தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டான். இதில் எனது கணவர் நிலை குலைந்து கீழே விழுந்தார். சத்தம் கேட்டு எழுந்து வந்த நான் எனது கணவரை கைத்தாங்கலாக தூக்கி நாற்காலியில் அமரவைத்தேன். சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டார். எனது கணவரின் சாவுக்கு காரணமான மருமகள் ஜிஜியா மீதும், எட்வின்ஜிவி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ரெத்தினா பாய்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top