மலேசியாவில் இந்தியப் பணிப்பெண் மர்மமான முறையில் தீக்காயங்களுடன் இறந்து கிடந்தார். பஞ்சாபை சேர்ந்தவர் ரத்விந்தர் கவுர், 25. இவர் மலேசியாவின் பினாங்கு மாகாணத்தில் உள்ள ஜார்ஜ் டவுன் பகுதியில், ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். வங்கி மேலாளர் - பள்ளி ஆசிரியர் தம்பதி வீட்டில் இவர் கடந்த இரண்டு மாதங்களாகப் பணியாற்றி வந்துள்ளார். உறவினர்களைப் பிரிந்து மலேசியாவில் வேலை செய்வது குறித்து ரத்விந்தர் கவுர் கவலைப்பட்டதாகவும், தாயகத்துக்குத் திரும்ப அந்தப் பெண் விரும்பியதாகவும், எஜமானர்கள் தெரிவித்துள்ளனர்.
ரத்விந்தர் கவுர், தனது அறையில் நேற்று முன்தினம் தீக்குளித்து 90 சதவீத தீக்காயமடைந்து இறந்து கிடந்தார். இது குறித்து, இந்தப் பெண்ணின் எஜமானர்கள்,போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் ரத்விந்தர் கவுரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக