இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பகுதிகளில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல் அவிவ், ஜெருசலேம், ரமலா, ஜெனின் உள்பட பல்வேறு நகரங்களில் இருந்த கட்டிடங்கள் அதிர்ந்தன.
பல இடங்களில் விரிசல் மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், உறக்கத்தில் இருந்த மக்கள் விழித்து அலறியபடி வெளியில் ஓடினர்.
சைப்ரஸ் கடல் பகுதியில் கடலுக்கு அடியில் 19.8 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டதாகவும், 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக