மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் புதையல் மூலம் கிடைக்கப்பெற்றதாகக் கூறி ஒரு தொகை போலி உலோகத் துண்டுகளை விற்க முற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
சந்தேகநபர்களிடம் இருந்து ஆயிரத்து 189 போலி உலோகத் துண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.இவற்றை சுமார் 5 இலட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட தொகைக்கு சந்தேகநபர்கள் விற்பதற்குத் தயார் நிலையில் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தவிர, சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது
0 கருத்து:
கருத்துரையிடுக