புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிற மொழிகளில் வரும் இ-மெயில்களை (Email) அவரவர் தாய்மொழியில் எளிதாக படிக்க ஜிமெயில் (Gmail) ஒரு புதிய வசதியை வழங்குகிறது. ட்ரேன்சிலேட் மெசேஜ் (Translate Message) என்ற பட்டனை கிளிக் செய்வதன் மூலம் மொழிபெயர்க்கும் வசதியினை பெற முடியும்.

இது போன்று இ-மெயில்களை மொழிபெயர்த்து கொள்ளும் வசதி நிச்சயம் அனைவருக்கும் பயனுள்ளதாக தான் இருக்கும். இப்பொழுது இருக்கும் வேலை சூழல் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் இ-மெயில்கள் மூலம் தொடர்பு கொள்ளவேண்டி இருக்கிறது.

வெளிநாட்டு மொழிகளையும் இதில் எளிதாக மொழிபெயர்த்து கொள்ளமுடியும். இதற்கு முன்பு இந்த வசதி ஜிமெயில் லேப்ஸில் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்பொழுது ட்ரேன்சிலேட் மெசேஜ் என்ற ஆப்ஷனின் மூலம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டனை கிளிக் செய்தால் அதற்குள் பல மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஆனால் இதில் இந்திய மொழிகளில் ஹிந்தி மொழி மட்டும் தான் தற்பொழுது இடம் பெற்றுள்ளது. கூடிய விரைவில் இந்த ட்ரேன்சிலேட் மெசேஜ் பட்டனில், இந்திய மொழிகளில் ஹிந்தி மட்டும் அல்லாது மற்ற மொழிகளும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top