புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சாரா ஈகா என்ற பெண் தனது ஏழு வயது மகனை நாயைப் போன்று கொடுமைப்படுத்தி, தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு யூலை மாதம் நடந்த இந்த கொலை சம்பவம் தொர்பான வழக்கு விசாரணை தற்போது நடைபெறுகிறது.

பிரேதப் பரிசோதனையில் அந்த 7 வயது சிறுவனின் மார்பு பகுதியில் முறிவு, கை, கால் எலும்புகள் முறிவு மற்றும் விரல் உடைந்திருப்பதும் தெரியவந்ததால், அச்சிறுவனின் தாய் அவனை அடித்து துன்புறுத்தியது உறுதியாகி உள்ளது.

சாரா ஈகாவும் வழக்கு விசாரணையின் போது, தான் ஒரு வருடமாகத் தன் மகனை நாயை அடிப்பது போலத் தினமும் முதுகில் அடித்ததையும், அவனுக்கு மருத்துவ சிகிச்சை எதுவும் செய்யாததையும் ஒத்துக் கொண்டாள்.

இவளது கணவன் யூசூஃப்(38) ஓட்டுநராக பணிபுரிகிறார். இவரும் தன் மகனை தாயார் அடித்துக் கொடுமைப்படுத்தியதைக் கண்டுகொள்ளவில்லை என்பதையும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் உறுதி செய்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top