புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பெண்ணாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்ய அனுமதி மறுத்தால் தற்கொலை செய்வேன் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 21 வயது மாணவர் கடிதம் எழுதியுள்ளார்.அசாமை சேர்ந்த மாண வர் பிடன் பரூவா (21). இவர் தன்னை ஒரு பெண்ணாகவே கருதுகிறார். தன்னை சுவாதி என்று
அழைப்பதையே விரும்புகிறார். தான் ஆண் உடலில் இருக்கும் பெண் என்று கூறுகிறார் அவர். சிறிய வயதில் சிறுமிகளை போலவே ஆடை அணிவது வழக்கம் என்றும் இதற்காக பெற்றோர் குறிப்பாக தந்தை தன்னை சித்ரவதை செய்ததாகவும் பரூவா கூறுகிறார்.

7ம் வகுப்பு படித்த போதுதான் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாற லாம் என்று தெரிந்து கொண்டதாக கூறும் பரூவா, பால் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார். இதற்கு ஸி1.5 லட்சத்தில் இருந்து ஸி3 லட்சம் வரை தேவைப் படும் என்று கருதிய அவர், பள்ளி முடிந்ததும் வேலை செய்து பணம் சேர்த்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம் 2,ம் தேதி மனோதத்துவ டாக்டர் ஒருவரை சந்தித்து பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்யும் மனோபலம் தன்னிடம் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கூறும்படி கேட்டார். டாக்டரும் பரிசோதனை செய்த பின்னர் அறுவைச் சிகிச்சை செய்யலாம் என்று தெரிவித்தார்.

இதை தொடர்ந்து மார்ச் 31ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி மும்பை க்கு வந்து தனது உறவினர் ஒருவர் வீட்டில் தங்கினார். ஏப்ரல் 17ம் தேதி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு தேதி குறிப்பிடப்பட்டது. தென் மும்பை பைகுலாவில் உள்ள சைபி மருத்துவமனையில் இந்த சிகிச்சை நடைபெறவிருந்தது. ஆனால் இது பற்றி அறிந்த பரூவாவின் தந்தை சுப்தி ரஞ்சன் பரூவா இந்த அறுவை சிகிச்சையை தடுத்து நிறுத்திவிட்டார். பரூவாவின் வங்கி கணக்கையும் முடக்கி விட்டார்.

இதனிடையேதான், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுமதிக்கும்படி தனது பெற்றோருக்கு உத்தரவிட கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பரூவா மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் வஜிவ்தர், ஜோஷி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

அப்போது பரூவாவின் வக்கீல் இஜாஸ் நக்வி, ‘‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரூவா ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், இந்த பிரச்னையில் தலை யிட்டு, தான் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் சட்டப்படி தற்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இன்று அனுமதி கிடைக்காவிட் டால் தற்கொலை செய்யப் போவதாகவும் கடித்ததில் பரூவா குறிப்பிட்டுள்ளார். பரூவா மேஜர். எனவே பாலின மாற்று அறுவை சிகிச்சை பற்றி முடிவு செய்யும் தகுதி அவருக்கு உண்டு’’ என்றார். ஆனால் மனு மீதான விசாரணையை நீதிபதிகள் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

விமானப்படை அதிகாரியை திருமணம் செய்ய திட்டம்

பரூவா கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தேசிய மனித உரிமை கமிஷன் தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். நான் தற்கொலை செய்தால் அதற்கு மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிதான் பொறுப்பு’’ என்றார். பெண்ணாக மாறிய பின்னர் விமானப்படையில் லெப்டினென்ட் பதவி வகிக்கும் நண்பரை திருமணம் செய்வதே பரூவாவின் திட்டம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top