புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உலகத்தில் எத்தனை எத்தனை விசித்திரங்கள் நடக்கிறது பாருங்கள்.ஈராக் நாட்டு விவசாயி ஒருவர் ஒரே நேரத்தில் இரு பெண்களை காதலித்து ஒரே இரவில் திருமணம் செய்து இருக்கின்றார்.இவரின் பெயர் Abdul Rahman Nayef al-Obeidi. வயது 23. மத்திய ஈராக்கில் சிறிய கிராமம் ஒன்றை சேர்ந்தவர்.

மணப் பெண்கள் இருவரும் இவருக்கு மச்சாள் உறவு முறை உடையவர்கள். Intidhar என்பவருக்கு வயது 17.Suad என்பவருக்கு வயது 22. வட திக்கிரித் நகரத்தில் உள்ள Al-Laqlaq கிராமத்தில் மணமகன் வீட்டில் கடந்த 06 ஆம் திகதி திருமணம் நடந்தேறியது. இரு மணப் பெண்களினதும் குடும்பத்தினர்,உறவினர்கள், நண்பர்கள் இவ்வைபவத்தில் பங்கேற்று மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தினர்.

வீட்டில் ஐந்தாவது ஆண் பிள்ளை இந்த மணமகன். கடைசிப் பிள்ளையும்கூட. இரு மச்சாள்மாரையும் ஒரே இரவில் திருமணம் செய்ய விரும்புகின்றார் என்று வீட்டில் பெற்றோருக்கு சொல்லி இருக்கின்றார். பெற்றோர் இவரை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கின்றனர். ஆயினும் உறவினர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து இருக்கின்றனர்.

இவருக்கு இறுதித் தீர்மானத்தை எடுக்கின்றமைக்கு ஒரு மாதம்கூட தேவைப்படவில்லை. இரு பெண்களையும் இவர் காதலிக்கின்றார் என்பதாலும் இரு பெண்களும் உறவினர்கள் என்பதாலும் விடயம் இலகுவாகி விட்டது.

இருந்தாலும் இரு பெண்களையும் சம்மதிக்க வைக்கின்றமை பெரிய காரியமாகதான் இருந்திருக்கின்றது. இரு பெண்களுக்கும் இவரின் தீர்மானம் பேரதிர்ச்சியை கொடுத்து இருக்கின்றது.



இரு பெண்களையும் எப்போதும் சமமாக நடத்துவார் என்று உத்தரவாதம் கொடுத்து இருக்கின்றார். இந்த உத்தரவாதத்தின் பேரிலேயே இரு பெண்களும் சம்மதித்து இருக்கின்றனர்.

ஒரு ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்கின்றமையை இஸ்லாம் அனுமதிக்கின்றது. ஆனால் நான்கு பெண்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று கட்டாயமாக தேவைப்படுத்துகின்றது. இரு பெண்களின் குடும்பத்தினரையும் திருமணத்துக்கு சம்மதிக்க வைக்கின்றமையில் இவரின் மூத்த தமையன் முக்கிய பங்காற்றி இருக்கின்றார்.

மணமகனின் தகப்பன் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையில் மகனை குறித்து பெருமிதம் அடைகின்றார் என்றும் ஐந்து ஆண் மக்களில் இளைய மகனுக்குதான் இரு பெண்களை திருமணம் செய்கின்ற புத்தி வந்திருக்கின்றது என்றும் ஏனைய பிள்ளைகளும் மீண்டும் திருமணம் செய்ய விரும்புகின்ற பட்சத்தில் மனப்பூர்வமாக நடத்திக் கொடுப்பார் என்றும் தெரிவித்து உள்ளார்.

மகனின் விருப்பத்துக்கு தாயும் ஆதரவு கொடுத்து இருக்கின்றார். இரு பெண்களையும் காதலிக்கின்ற மகன் மனம் வருந்தி விட கூடாது என்பதில் அம்மா உறுதியாக இருந்திருக்கின்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top