புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பேராசிரியைக்கு சினிமா பாணியில் காதல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சு (31). இவர், புதுச்சேரி வில்லியனூரில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் சமூக துறை உதவி பேராசிரியையாக பணியாற்றி
வருகிறார். புதுச்சேரி அரவிந்தர் வீதியில் தனது தங்கையுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதே கல்லூரியில் சமூக துறையில் உதவி பேராசிரியராக கேரளாவை சேர்ந்த ஷாஜி (34) என்பவரும் பணியாற்றுகிறார்.

கடந்த 6 மாதமாக தன்னை காதலிக்குமாறு கூறி அஞ்சுவை, ஷாஜி தொல்லைபடுத்தியுள்ளார்.

பஸ்சில் ஏறினால் டிக்கெட் எடுப்பது, காய்கறி வாங்க சென்றால் கூடவே சென்று காய்கறிக்கு பணம் கொடுப் பது என விடாமல் துரத்தி துரத்தி சென்று தன்னை காதலிக்குமாறு கூறியுள்ளார்.

தன்னிடம் தினமும் பேச வேண்டும் என்றும், எங்கு சென்றாலும் கூடவே வருவேன் என்றும் அடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மிஷன் வீதியில் உள்ள சர்ச்சுக்கு அஞ்சு சென்ற போது ஷாஜியும் பின்தொடர்ந்துள்ளார். பிரார்த்தனையில் ஈடுபட்ட அஞ்சுவிடம் தொல்லை கொடுத்தாராம். இதையடுத்து, ‘உன்னை பிடிக்கவில்லை‘ என அஞ்சு கூறியுள்ளார். இருப்பினும் விடாப்பிடியாக தன்னை காதலித்தே ஆக வேண்டும் என்று ஷாஜி வற்புறுத்தியுள்ளார்.

இதனால் வெறுப்படைந்த அஞ்சு, வடக்கு பகுதி எஸ்பி ராமராஜிடம் புகார் செய்தார். புகாரை விசாரணை செய்த எஸ்பி, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து, விருப்பமில்லாமல் தொல்லை கொடுத்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் ஷாஜி மீது வழக்குப்பதிவு செய்து, எஸ்.ஐ ஜானகி விசாரணை நடத்தி வருகிறார். ஷாஜியை போலீசார் தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top