இந்த பூமியில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளினதும் ஜீன்களில் அடிப்படையில் கடமையாக பதிக்கப்பட்டிருப்பது இனப்பெருக்கமே. ஓர் இனம் அழியாது பூமியில் நிலைத்து வாழ இனப்பெருக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒவ்வொரு ஜீவராசியும் தமக்கென சிறப்புத்தேர்ச்சி வாய்ந்த இனப்பெருக்க முறையை பயன்படுத்துகின்றன. அவ் வகையில் உலகிலேயே இனப்பெருக்கத்தின் சூப்பர் ஸ்டார் என பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய உயிரினம் எது தெரியுமா?
கரப்பான் பூச்சி!
நம்ப முடிகிறதா? மனிதனுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து பூமியில் அழிவில்லாது வாழ்ந்து வருகிறது இந்த கரப்பான் பூச்சி இனம். இது ஏன் இனப்பெருக்கத்தின் சூப்பர்ஸ்டார் என்று சொல்லப்படுகிறது தெரியுமா?
ஒரு முறை உடலுறவு கொண்ட பெண் கரப்பான் பூச்சியால் 1000 இற்கு மேற்பட்ட குஞ்சுகளை பொரிக்க முடியும். காரணம், உடலுறவின் போது பெறப்படும் ஆணின் விந்தணுக்களை தனது உடலில் சேமித்து வைத்துக்கொள்ளும் ஆற்றல் பெண் கர்ப்பான் பூச்சிக்கு உண்டு. தேவைப்படும் போது சேமிப்பில் இருந்து விந்தணுவை எடுத்து தனது கருமுட்டையோடு இணைத்து குஞ்சை உருவாக்கமுடியும்.
இனப்பெருக்கத்தின்போது ஆண் கரப்பான் பூச்சியில் இருந்து சுரக்கும் ஒருவித இரசாயன திராவகம் பெண் கரப்பான் பூச்சியின் உடலுக்கு நல்லதில்லை என்பதால் தான் இந்த விந்தணு சேமிப்பு அமைப்பு என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருமுறை உடலுறவில் ஈடுபட்ட பெண் கரப்பான், தனித்து ஓர் இடத்தில் விடப்பட்டால் அதனால் அங்கு தன் இனத்தை சிறு காலத்தில் இலட்சம் அளவுக்கு பெருக்கமுடியும்.
இதனாலேயே கரப்பான் பூச்சிகள் இனப்பெருக்கத்தின் சூப்பர்ஸ்டார்கள் என சிறப்பிக்கப்படுகின்றன.
0 கருத்து:
கருத்துரையிடுக