மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் பிரதி அதிபர் உயிரிழந்துள்ளடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் மட்டக்களப்பு வின்சட் மகளிர் தேசிய உயர்தர பாடசாலையின் பிரதி அதிபர் தங்கேஸ்வரி நாகரெட்னம் (55வயது)என்பவரேஉயிரிழந்துள்ளார்.
அத்துடன், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச்சென்ற அவரது மகனான நரேந்திரகுமார் (22வயது) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.இவர்கள் இருவரும் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது மகன் நித்திரை தூக்கத்தில் மின்சாரத் தூணில் மோட்டார் சைக்கிளை மோதியுள்ளார்.
இதன்போது பிரதி அதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக