தான் செய்து வந்த பாலியல் சில்மிஷம் குறித்து தனது அண்ணனிடம் புகார் கூறியதால் வாலிபர், தனது அண்ணியின் கழுத்தில் பேனா கத்தியால் குத்தி படுகாயப்படுத்தினான். இதையடுத்து பொதுமக்கள் அவனை பிடித்து அடித்து உதைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.கோவை
எஸ்.என்.பாளையத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சிந்து. 32 வயதாகும் இவரும், பெரியசாமியும் காதலித்து மணம் புரிந்தவர்கள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
எஸ்.என்.பாளையத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சிந்து. 32 வயதாகும் இவரும், பெரியசாமியும் காதலித்து மணம் புரிந்தவர்கள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
பெரியசாமியின் சித்தப்பா மகனான 27 வயது ராஜேஷ் சென்னையில் வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தார். இதையடுத்து தன்னுடன் இருந்து கடை வேலைகளைப் பார்த்துக் கொள்ளுமாறு அழைத்து வந்தார் பெரியசாமி. ராஜேஷும் தனது அண்ணனுடன் சேர்ந்து அவரது கடையில் வியாபாரத்தைக் கவனித்து வந்தார்.
இந்த நிலையில், பெரியசாமியின் மனைவியான சிந்து மீது ராஜேஷுக்கு முறையற்ற காதல் பிறந்தது. அடிக்கடி தனது அண்ணி என்றும் பாராமல் சிந்துவிடம் சேஷ்டைகளை செய்ய ஆரம்பித்தார். இதனால் வெகுண்ட சிந்து, ராஜேஷை கண்டித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து தனது வேலைகளைச் செய்து வந்தார் ராஜேஷ். இதனால் கொதிப்படைந்த சிந்து தனது கணவரிடம் கூறி விட்டார். அவர் ராஜேஷை கூப்பிட்டு கடுமையாக கண்டித்துள்ளார்.
இதனால் ராஜேஷுக்கு சிந்து மீது கோபம் பிறந்தது. கடையில் பெரியசாமி இல்லாத நேரம் பார்த்து அவர் சிந்துவிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது தனது பேனா கத்தியை எடுத்து சிந்துவை சரமாரியாக குத்தி கழுத்தை அறித்துள்ளார்.
கடையில் வைத்து நடந்த இந்த சம்பவத்தைப் பார்த்து சாலையில் போனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அண்ணியின் கழுத்தில் குத்தி விட்டு தப்பி ஓட முயன்ற ராஜேஷைப் பிடித்த பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து ராஜேஷைக் கைது செய்தனர். சிந்துவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக